.webp)

Colombo (News 1st) நான்கு இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்கள் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் சுமார் ஒரு இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்படவுள்ளதாக அதன் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்தார்.
வேரஹெர, அனுராதபுரம், மாத்தறை மாவட்ட அலுவலகங்களிலும் தற்போது சாரதி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்கு தேவையான சுமார் 8 இலட்சம் அட்டைகள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
சாரதி அனுமதிப்பத்திர அட்டைகளை வழங்கும் நடவடிக்கை கடந்த 02 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
கடந்த காலத்தில் அதற்கு பதிலாக தற்காலிக அனுமதிப்பத்திரங்கள் மாத்திரமே விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
