.webp)

Colombo (News 1st) நாட்டில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் 05 புதிய அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் R.M.A.L. ரத்நாயக்க குறிப்பிட்டார்.
இந்த வருடத்திற்காக அரசியல் கட்சிகளைப் பதிவு செய்யும் நடவடிக்கை ஜனவரி முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
