ரயிலில் மோதிய கெப் : இருவர் உயிரிழப்பு

ரயிலில் மோதிய கெப் : இருவர் உயிரிழப்பு

by Staff Writer 22-02-2026 | 5:32 PM

Colombo (News 1st) பெலியத்தவிலிருந்து மருதானை நோக்கி பயணித்த அதிவேக ரயிலில் இன்று(22) காலை பயாகல பகுதியில் கெப் வாகனம்  மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் கெப் வாகனத்தில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ரயிலில் மோதிய கெப் வாகனம் 200 மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டதாக நியூஸ் ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.

விபத்து இடம்பெற்ற போது கெப் வாகனத்தில் 03 பேர் பயணித்துள்ளனர்.