.webp)
-554031.jpg)
COLOMBO(News1st) - பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்குதல் தொடர்பான சட்டமூலம் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்குதல் தொடர்பான சட்டமூலம் திருத்தங்கள் இன்றி 152 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
கடந்த செவ்வாய்க்கிழமை (17) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பின் போதே குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.
சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக 02 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்க மாதுகொட ஆகியோரே சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்தனர்.
இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் மூலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், உயிரிழந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் மனைவியர் தற்போது பெற்றுவரும் ஓய்வூதியம் இரத்து செய்யப்படவுள்ளது.
