CID முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் W.திலகரத்ன கைது

CID முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் W.திலகரத்ன கைது

by Chandrasekaram Chandravadani 09-02-2026 | 7:34 PM

Colombo (News 1st) குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் W.திலகரத்ன மத்திய குற்ற விசாரணை பணியகத்தினால் இன்று(09) முற்பகல் கைது செய்யப்பட்டார்.

எவ்வித நீதிமன்ற உத்தரவும் இன்றி தமது சொந்த விருப்பத்திற்கு அமைய 2019ஆம் ஆண்டில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் 704 அதிகாரிகளுக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்த சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.

கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் W.திலகரத்ன குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ் மாஅதிபராக நியமிக்கப்பட்டார்.

2019 நவம்பர் 25ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் 704 அதிகாரிகளுக்கு தனது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் வெளிநாட்டு பயணத்தடை விதிப்பதற்கு நடவடிக்கை எடுத்தார்.

கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் 10 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் அவருக்கு வௌிநாட்டு பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்