மைக்கல் அஞ்சலோ வரைந்த ஓவியம் 23 மில்லியன் டொலர்

ஓவியர் மைக்கல் அஞ்சலோவினால் 514 ஓவியம் 23 மில்லியன் டொலருக்கு ஏலத்தில் விற்பனை

by Rajalingam Thrisanno 06-02-2026 | 12:56 PM

COLOMBO (News 1st) - இத்தாலியின் பிரபல ஓவியர் மைக்கல் அஞ்சலோவினால் 514 ஆண்டுகளுக்கு முன்னர் வரையப்பட்ட ஓவியமொன்று 23 மில்லியன் டொலருக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

வத்திக்கானிலுள்ள சிஸ்டைன் தேவாலய கூரையின் உட்புறத்தில் ஓவியம் தீட்டும் போது முதற்கட்ட பயிற்சியாக அவர் ஒரு பொருத்தமான பாதத்தின் ஓவியத்தை வரைந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க பிரஜையொருவர் தம்மிடமிருந்த ஓவியத்தை ஏல மதிப்பீட்டிற்காக சமர்ப்பித்தபோது நிபுணர்கள் அதன் பெறுமதியை உறுதிப்படுத்தியுள்ளனர்.

குறித்த நபர் தமது பாட்டியிடமிருந்து ஓவியத்தை பெற்றுக் கொண்டதாகவும், 18 ஆம் நூற்றாண்டிலிருந்து இந்த ஓவியம் தமது குடும்ப உறுப்பினர்களிடம் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். 

பியேட்டா மற்றும் டேவிட் போன்ற உலகப் புகழ்பெற்ற சிற்பங்களை உருவாக்கிய மைக்கல் அஞ்சலோ உலகின் மிகச்சிறந்த கலைஞர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.