புதிய கணக்காய்வாளர் நாயகம் கடமைகளை பொறுப்பேற்றார்..

by Staff Writer 05-02-2026 | 12:17 PM

Colombo (News 1st) புதிய கணக்காய்வாளர் நாயகமாக தெரிவு செய்யப்பட்டுள்ள சமுதிகா ஜயரத்ன இன்று(05) முற்பகல் தமது கடமைகளை பொறுப்பேற்றார்.

வரலாற்றில் தெரிவு செய்யப்பட்டுள்ள முதலாவது பெண் கணக்காய்வாளர் நாயகம் இவராவார்.

நாட்டின் 42ஆவது கணக்காய்வாளர் நாயமாக தெரிவு செய்யப்பட்டுள்ள சமுதிகா ஜயரத்ன, வங்கி, நிதி, காப்புறுதி, வரி, திறைசேரி சேவைகள் மற்றும் கடன் முகாமைத்துவம் உள்ளிட்ட துறைகளில் தேர்ச்சி பெற்ற அதிகாரியாவார்.

பல அரச நிறுவனங்களில் பணியாற்றியுள்ள அவர் 2003ஆம் ஆண்டு கணக்காய்வாளர் திணைக்களத்தில் இணைந்துள்ளார்.