.webp)
-553639.jpg)
Colombo (News 1st) எவ்வித பிளவுகள், இனவாதம் மற்றும் அடிப்படை வாதத்திற்கு இடமளிக்காது தேசிய ஒற்றுமையை முன்னிறுத்தி நாட்டை கட்டியெழுப்புவதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.
78ஆவது சுதந்திர தின நிகழ்வில் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதார நன்மைகள், சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள மக்களையும் சென்றடையும் வகையில் திட்டங்களை வகுக்கவுள்ளதாக ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.
தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் இன்று(04) காலை ஜனாதிபதி தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.
'இலங்கையை கட்டியெழுப்புவோம்' எனும் தொனிப்பொருளில் இந்த ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் வருகையுடன் சுதந்திர தின தேசிய நிகழ்வு ஆரம்பமானது.
தாய்நாட்டின் சுதந்திரம், இறையாண்மை பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக இன்னுயிரை தியாகம் செய்த தேசிய வீரர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் அணிவகுப்பும் கலாசார நிகழ்வுகளும் நடைபெற்றன.
தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதன் பின்னர் 78ஆவது தேசிய சுதந்திர தின விழா இனிதே நிறைவு பெற்றது.
