.webp)

Colombo (News 1st) முஅம்மர் கடாபியின் மகன் சைப் அல்-இஸ்லாம் கடாபி சுட்டுக் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லிபியா - அல்ஜீரியா எல்லைக்கு அருகில் அவர் கொல்லப்பட்டதாக சைப் அல்-இஸ்லாம் கடாபியின் சகோதரி லிபிய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
நால்வர் கொண்ட ஆயுததாரிகள் குழு கடாபியின் வீட்டிற்கு சென்று அவரை படுகொலை செய்துள்ளதாக அவரின் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அவரது படுகொலைக்கு பொறுப்பானவர்கள் தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
சடலத்தை பரிசோதித்த சட்ட வைத்திய அதிகாரிகள், சைப் அல்-இஸ்லாம் துப்பாக்கிச்சூட்டினால் உயிரிழந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளதுடன் அந்நாட்டு சட்ட மாஅதிபர் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
1972ஆம் ஆண்டில் பிறந்த சைப் அல் இஸ்லாம், 2011ஆம் ஆண்டில் தனது தந்தையின் ஆட்சி வீழ்ச்சியடைவதற்கு முன்னர் அந்நாட்டின் செல்வாக்கு மிக்க நபராக திகழ்ந்தார்.
