.webp)

Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உறவுமுறை சகோதரர் பண்டார ரம்புக்வெல்ல இன்று(03) கைது செய்யப்பட்டுள்ளார்.
2006ஆம் ஆண்டு 05ஆம் இலக்க நிதி தூய்தாக்கல் தடுப்பு சட்டத்தின் மூன்றாம் பிரிவின் முதலாம் சரத்தின் கீழ் அவர் குற்றமிழைத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வௌ்ளவத்தை பகுதியில் இன்று காலை 6.45 அளவில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் முறைகேடாக ஈட்டப்பட்ட நிதியை தூய்தாக்கல் செய்வதற்கு உதவிய குற்றத்தின் கீழ் செனவிரத்ன பண்டார ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டுள்ளார்.
