.webp)

Colombo (News 1st) கைது செய்யப்பட்ட நடிகர் ஹேமால் ரணசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கல்கிசை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் சந்தேகநபர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வௌ்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் இன்று(03) முற்பகல் சரணடைந்த பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஜனவரி 08ஆம் திகதி ஹேவ்லொக் சிட்டி வளாகத்தில் நபரொருவர் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கமைய அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
