கட்டளையை மீறி பயணித்த டிப்பர்மீது துப்பாக்கிச்சூடு

கட்டளையை மீறி பயணித்த டிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு

by Staff Writer 01-02-2026 | 2:51 PM

Colombo (News 1st) கிளிநொச்சி - தர்மபுரம் பகுதியில் கட்டளையை மீறி பயணித்த டிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளனர்.

தர்மபுரத்திலிருந்து பயணித்த டிப்பரை புளியம்பொக்கணை வீதித்தடைக்கருகே நிறுத்துமாறு சமிக்ஞை காட்டிய போதும் கட்டளையை மீறி பயணித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச்சூட்டில் டிப்பரின் பின்புற டயர்களுக்கு சேதமேற்பட்ட போதும் சுமார் 02 கிலோமீட்டர் வரை சாரதி டிப்பரை நிறுத்தாது செலுத்தப்பட்டுள்ளது.

டிப்பரை துரத்திச்சென்ற பொலிஸார் கண்டாவளை பகுதியில் டிப்பர் வாகனத்தை கைப்பற்றிய போதும், சாரதி தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.

குறித்த டிப்பரில் அனுமதிப்பத்திரமற்ற நிலையில் 03 கியூப் மணல் ஏற்றப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.