.webp)
-553546.jpg)
COLOMBO (News 1st) - பயணிகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் பயணிக்கும் பஸ்கள் தொடர்பில் உடனடியாக முறைப்பாடளிக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
கிடைக்கும் முறைப்பாடுகளை உரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரதிப் பொலிஸ் மாஅதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
மதுபோதையில் அல்லது போதைப்பொருளை பயன்படுத்திய பின்னர் பஸ்களை செலுத்தும் சாரதிகள், அநாகரீகமான முறையில் செயற்படும் நடத்துனர்கள், பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் பாடல்களை ஒலிபரப்புதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் முறைப்பாடுகளை வழங்குமாறு அவர் கோரியுள்ளார்.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள தொலைபேசி இலகத்திற்கு அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடளிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
1955 என்ற துரித இலக்கத்திற்கு அழைத்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும்.
071 259 5555 எனும் வாட்ஸ்அப் இலக்கத்திற்கும் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும்.
