சுதந்திரதின ஒத்திகை - விசேட போக்குவரத்து திட்டம்

78ஆவது சுதந்திரதின நிகழ்வுகளுக்கான ஒத்திகைகளுக்காக விசேட போக்குவரத்து திட்டம்

by Staff Writer 30-01-2026 | 11:32 AM

Colombo (News 1st)

78ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் எதிர்வரும் 4ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளன. 
இதனை முன்னிட்டு இன்று காலை முதல் கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் விசேட ஒத்திகை நடைபெறுகின்றது.

இதன் காரணமாக கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தை சூழவுள்ள வீதிகளில் இன்று(30) முதல் எதிர்வரும் 4ஆம் திகதி வரை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. 

காலை 7.45 முதல் பிற்பகல் 1.30 வரையான காலப்பகுதியில் இந்தப் போக்குவரத்துத் திட்டம் நடைமுறையில் இருக்குமென போக்குவரத்து, கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரதிப் பொலிஸ் மாஅதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர தெரிவித்தார். 


2026 ஆம் ஆண்டு ஜனவரி 30 மற்றும் 31 ஆம் திகதிகளிலும் பெப்ரவரி முதலாம், 2ஆம் திகதிகளிலும் காலை 7.30 முதல் முற்பகல் 11.30 வரை ஒத்திகைகள் நடைபெறவுள்ளன. அத்துடன் 30 மற்றும் 2ஆம் திகதிகளில் சுதந்திர மாவத்தையூடாக சுதந்திர சதுக்க வளாகத்திற்குள் நுழையும் வாகனங்களை மட்டுப்படுத்த எதிர்ப்பார்த்துள்ளதாக டபிள்யூ.பி.ஜே.சேனாதீர தெரிவித்துள்ளார்.