.webp)
-553321.jpg)
COLOMBO (News1st) தெற்கு கடலில் போதைப்பொருளுடன் கைப்பற்றப்பட்ட நீண்ட நாள் மீன்பிடி படகிலிருந்த 11 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு மீன்பிடி படகில் 05 மீனவர்களும் மற்றைய படகில் 06 பேரும் இருந்ததாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் வழங்கிய தகவலுக்கு அமைய தெற்கு கடலில் 02 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது 270 கிலோகிராம் ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் 02 நீண்டநாள் மீன்பிடிப் படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
