.webp)

Colombo (News 1st) ‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் கம்மெத்த Care & Dare’ திட்டம் பதுளையில் இன்று(24) ஆரம்பமானது.
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களை கட்டியெழுப்பும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட வேலைத்திட்டம் இதுவாகும்.
இன்று முதல் தொடர்ச்சியாக 03 நாட்களுக்கு பதுளை மாவட்டத்தை கேந்திரமாகக் கொண்டு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
கம்மெத்தவால் ஆரம்பிக்கப்பட்ட புதிய திட்டமான ‘Care & Dare’ வேலைத்திட்டம் அண்மையில் கொத்மலையில் செயற்படுத்தப்பட்டதுடன் இதனூடாக ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைந்தனர்.
இந்த வேலைத்திட்டத்தை இன்றைய தினம் பதுளை பசறை மத்திய கல்லூரியிலும், நாளை மடோல்சிம தமிழ் வித்தியாலயத்திலும் 26ஆம் திகதி வெலிமடை திவுரும்பொல புராண ரஜமஹா விஹாரையிலும் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மருத்துவ சேவைகள், ஆலோசனை சேவைகள், சட்ட சேவைகள் மற்றும் நிவாரணங்களை வழற்கும் செயற்பாடுகள் இந்த கம்மெத்த ‘Care & Dare’ திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளன.
வருமான வழிகள், சுயதொழில் வாய்ப்புகளை இழந்த மக்களுக்கான விசேட ஆலோசனை சேவைகளையும் இங்கு முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளன.
தேசிய பயிற்சி மற்றும் தொழில்துறை பயிற்சி அதிகார சபையும் இதற்காக (NAITA) கம்மெத்தவுடன் கைகோர்த்துள்ளது.
அனர்த்தங்களால் இழந்த பிறப்புச் சான்றிதழ்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை வழங்குவதற்காக பசறை பிரதேச செயலகம் இன்று கம்மெத்த ‘Care & Dare’ திட்டத்தில் இணையவுள்ளது.
கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு பிள்ளைகளின் விசேட சேவைகளை வழங்குவதற்காக பசறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையும் திட்டமிட்டுள்ளது.
இன்றைய வேலைத்திட்டத்தில் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலருணவுப் பொருட்கள், வீட்டுப் பொருட்கள் சுகாதாரப் பொதிகளை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
