.webp)
-553279.jpg)
Colombo (News 1st) - சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை குறைத்துக் கொள்வதற்கு வெலிசறை பகுதியில் புதிய சிறைச்சாலையை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சு தெரிவிக்கின்றது.
சிறைச்சாலை குறித்து வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
சிறைச்சாலைகளில் புதிய கட்டடங்களை நிர்மாணித்து கைதிகளை விரைவில் அங்கு அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்கள் சிலவற்றின் கட்டங்களை தெரிவு செய்து அவற்றை தற்காலிக சிறைச்சாலைகளாக பயன்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சிறைச்சாலைகளில் 11,000 கைதிகளை தடுத்து வைத்திருப்பதற்கான இயலுமை மாத்திரமே காணப்படுகின்ற போதிலும் தற்போது 39,000-இற்கும் மேற்பட்ட கைதிகள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
