Care & Dare அடுத்த நிவாரண முகாம் பதுளையில்..

கம்மெத்தவின் Care & Dare திட்டத்தின் அடுத்த நிவாரண முகாம் நாளை பதுளை மாவட்டத்தில் ஆரம்பம்

by Staff Writer 23-01-2026 | 5:06 PM

Colombo (News 1st) ‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் கம்மெத்த ‘Recover and Rebuild: Care & Dare’ திட்டத்தை ஆரம்பித்தது.

இதன் அடுத்த நிவாரண முகாம் பதுளை மாவட்டத்தின் பசறை, மடுல்சீமை, வெலிமடை ஆகிய பிரதேசங்களில் நாளை(24) முதல் 03 நாட்களுக்கு முன்னெடுக்கப்படுகின்றது.

அவசர உணவுப் பொருட்கள் மற்றும் நிவாரணப் பொருட்களை விநியோகித்தல்

மருத்துவ மற்றும் பொது சுகாதார சேவைகள்

ஆவணங்கள் மற்றும் இழப்பீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான அவசர சட்ட உதவி

பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு தேவையான உதவிகள்

வாழ்வாதாரங்களை மீட்டெடுப்பதற்கான தொழில்முறை மற்றும் திறன் பயிற்சி வாய்ப்புகள் 

இந்த மனிதாபிமானப் பணி சுகாதார அமைச்சு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) மற்றும் அவசர நிவாரண மையம் ஆகியவற்றுடன் இணைந்து செயற்படுத்தப்படுகிறது.

அத்துடன், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், தேசிய தொழில் பழகுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை (NAITA), கொத்மலை பிரதேச செயலகம் மற்றும் V-Force தன்னார்வக் குழுக்களும் இதற்கு தொழில்முறை ரீதியான ஒத்துழைப்பை வழங்குகின்றன.

அவுஸ்திரேலியாவை தளமாகக்கொண்ட Minderoo Foundation வழங்கிய ஒரு மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் நிதி பங்களிப்பின் மூலம் இந்த செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதன் முதலாவது முகாம் கடந்த 10ஆம் திகதி கொத்மலை பிரதேசத்தில் நடைபெற்றது.