கொழும்பு கோட்டை - கொம்பெனித்தெரு மேம்பாலம்

கொழும்பு கோட்டையையும் கொம்பெனித்தெருவையும் இணைக்கும் மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு..

by Staff Writer 19-01-2026 | 7:05 PM

Colombo (News 1st)- கொழும்பு கோட்டையையும்  கொம்பெனித்தெருவையும் இணைக்கும் இந்த மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்காக இன்று (19) கையளிக்கப்பட்டது. 

பெருந்தெருக்கள் அமைச்சின் கீழ் உள்ள வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்த செயற்றிட்டத்திற்கான செலவு 3.1 பில்லியன் ரூபாய் ஆகும். 

கொம்பனித்தெரு ரயில் கடவையில் நீண்டகாலமாக காணப்பட்ட வாகன நெரிசலுக்கான தீர்வாக இந்தப் பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 

ஒருவழிப் போக்குவரத்தை மாத்திரம் முன்னெடுக்கும் வகையிலுள்ள இந்த பாலம் இரண்டு வீதிகளை கொண்டுள்ளது. 

போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கொழும்பு மேயர் விராய் கெலி பல்தஸார் ஆகியோரின் தலைமையில் இந்த மேம்பாலம் திறந்துவைக்கப்பட்டது.