மாணவர்களுக்கான உதவிக் கொடுப்பனவுகள் வழங்கல் நிறைவு

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கல்வி உதவிக் கொடுப்பனவு வழங்கல் நிறைவு

by Staff Writer 16-01-2026 | 6:15 PM

Colombo (News 1st)

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் கல்வி உதவிக் கொடுப்பனவு முழுமையாக வழங்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளது. 

3000 மாணவர்களுக்கு 15,000 ரூபா வீதம் கல்வி உதவிக் கொடுப்பனவு வழங்கப்பட்டதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார். 

தற்போது கிடைக்கப்பெற்ற மேன்முறையீடுகளை மீளாய்வு செய்து வருவதாக அவர் கூறினார். 

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை துப்புரவுபடுத்துதல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கான 25,000 ரூபா கொடுப்பனவு தற்போது முழுமையாக வழங்கப்பட்டுள்ளதுடன் மேன்முறையீடுகள் ஆராயப்பட்டு வருவதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் ப்ரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார். 

வீடுகளை இழந்து வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த வாடகை கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறினார். 

வீடுகளை இழந்தவர்களுக்கு நிலையான வீடுகளை நிர்மாணிப்பதற்கு பொருத்தமான காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் பரிந்துரையைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.