அமெரிக்க குடியேற்ற விசா நடைமுறை

அமெரிக்க குடியேற்ற விசா நடைமுறையில் புதிய மாற்றம்

by Staff Writer 15-01-2026 | 8:15 PM

Colombo (News 1st) 75 நாடுகளுக்கான அமெரிக்க குடியேற்ற விசா நடைமுறைகளை காலவரையின்றி நிறுத்தி வைப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார்.

குறித்த நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த மக்கள் அமெரிக்க மக்களுக்கான நலன்புரி மற்றும் சலுகைகளைப் பயன்படுத்தி சொத்துக்களை குவித்துள்ளமை தெரியவந்துள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான், அசர்பைஜான், பங்களாதேஷ், எகிப்து, ஈரான், குவைத், நேபாளம், பாகிஸ்தான், ரஷ்யா, தாய்லாந்து உள்ளிட்ட 75 நாடுகளின் குடியேற்ற விசா தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்கப்படுகின்றன.

இந்தத் தீர்மானம் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.

எவ்வாறாயினும், 75 நாடுகளின் முழுமையான பட்டியல் இதுவரை வௌியாகவில்லை.