.webp)

Colombo (News 1st) - திடீர் அனர்த்த நிலைமையை எதிர்கொள்வதற்காக அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான 10 ஹெலிகொப்டர்களை இலங்கைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது எக்ஸ் தளத்தில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான TH-57 பெல் 206 SEA RANGER ரக 10 ஹெலிகொப்டர்கள், இலங்கை விமானப்படைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் தயாரிக்கப்பட்டுள்ள குறித்த ஹெலிகொப்டர்கள் இவ்வருடத்தின் முற்பகுதியில் இலங்கையிடம் ஒப்படைக்கப்படும் என ஜூலி சங் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
