நீர்ப்பாசன திணைக்களத்தின் அறிவுறுத்தல்

தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்

by Chandrasekaram Chandravadani 08-01-2026 | 12:12 PM

Colombo (News 1st) வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அமைந்துள்ள ஆற்றுப்படுக்கைகளில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலுள்ள ஆற்றுப்படுக்கைகளில் வௌ்ள அபாயம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த மாவட்டங்களில் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாக திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.