.webp)

COLOMBO (News 1st)
கடந்த ஆண்டில் 76 அரச அதிகாரிகள் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட நபர்களிடையே அதிகளவிலானோர் பொலிஸ் அதிகாரிகள் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அந்த எண்ணிக்கையில் 24 பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
119 சுற்றிவளைப்புகளில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே, குறித்த காலப்பகுதிக்குள் ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளில் 07 அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த 11 மாத காலப்பகுதிக்குள் 7811 முறைப்பாடுகள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
