.webp)

COLOMBO (News 1st)
லிட்ரோ சமையல் எரிவாயு விலைத் திருத்தம் தொடர்பான தீர்மானம் எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படுமென லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையே, நேற்று(01) முதல் அமுலாகும் வகையில் லாஃப் சமையல் எரிவாயுவின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 12.5 கிலோகிராம் லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரொன்றின் விலை 150 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 4250 ரூபாவாகும். 05 கிலோகிராம் லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரொன்றின் விலை 65 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 1710 ரூபாவென லாஃப் நிறுவனம் அறிவித்துள்ளது.