COLOMBO( News 1st)
புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அமரபுர மகா பீடத்தின் கரகொட உயங்கொட மைத்ரிமூர்த்தி மகா நாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றார்.
வெள்ளவத்தையிலுள்ள அமரபுர மகா பீட பிக்கு தலைமையகத்திற்கு ஜனாதிபதி நேற்று(01) விஜயம் செய்தார்.
இதன்போது,
செத்பிரித் பாராயணம் செய்த மகாநாயக்க தேரர், ஜனாதிபதிக்கு ஆசிகளை வழங்கினார்.
இதனிடையே, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இலங்கை ராமன்ய மகா பீடத்தின் மகாநாயக்க தேரர் மகுலேவே விமல நாயக்க தேரரையும் சந்தித்து ஆசி பெற்றார்.
மீரிகம மினிஒலுவ ஸ்ரீ வித்யாவாச மகா பிரிவெனாவிற்கு நேற்று பிற்பகல் சென்ற ஜனாதிபதி, மகாநாயக்க தேரரைச் சந்தித்து, கலந்துரையாடியுள்ளார்.
செத் பிரித் பாராயணம் செய்த மகாநாயக்க தேரர், புத்தாண்டின் செயல்பாடுகளுக்காக ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திற்கு தமது ஆசிகளை வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.