.webp)

COLOMBO( News 1st)
தரம் 06இற்கான ஆங்கில மொழி பாடத்திற்கான மொடியூல் விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் குழுவொன்று அமைச்சுக்கு விஜயம் செய்து விசாரணைகளை மேற்கொண்டதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.
தரம் 6 இற்கான ஆங்கில மொழி பாடத்திற்கான மொடியூலில் உள்ளடக்கப்பட்டிருந்த பொருத்தமற்ற இணையத்தளம் காணப்பட்ட பகுதியை அகற்றி மாணவர்களுக்குப் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கூறினார்.
தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரண தமது பதவியில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
இதேவேளை, 2026 ஆம் ஆண்டில் பாடசாலைப் புத்தகங்களை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
வலய மட்டத்தில் குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ குறிப்பிட்டார்.
அனைத்து பாடப்புத்தகங்களும் ஆராயப்பட்டதன் பின்னர் பகிர்ந்தளிக்கவுள்ளன.
