முகாமையாளர் கொலை : விசாரணை CID-யிடம் ஒப்படைப்பு

அம்பலாங்கொடை வர்த்தக நிலைய முகாமையாளர் கொலை தொடர்பான அடுத்தகட்ட விசாரணை CID-யிடம் ஒப்படைப்பு

by Staff Writer 30-12-2025 | 2:24 PM

Colombo (News 1st) அம்பலாங்கொடை வர்த்தக நிலையமொன்றின் முகாமையாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான அடுத்தகட்ட விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் மாஅதிபரின் உத்தரவிற்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இதுவரை 09 சந்தேநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய பல சந்தேகநபர்கள் கண்டி - அம்பிட்டியவிலுள்ள முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோனுக்கு சொந்தமான வீட்டில் தங்கியிருந்தமை வௌிக்கொணரப்பட்டுள்ளது.

குறித்த வீட்டின் கூரையைப் புனரமைப்பதற்கான ஒப்பந்தம் சந்தேகநபர்களுக்கு வழங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் ஒப்பந்ததாரருடன் பல தடவைகள் குறித்த வீட்டிற்கு சென்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு பின்னரும் சந்தேகநபர்கள் அம்பிட்டியவிலுள்ள குறித்த வீட்டிற்கு சென்றுள்ளமை விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.