.webp)
-606836-552226.jpg)
Colombo (News 1st) மதவாச்சி - தலைமன்னார் இடையிலான ரயில் போக்குவரத்து அடுத்த 3 வாரங்களுக்குள் ஆரம்பிக்கப்படுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அனர்த்தங்கள் காரணமாக ரயில் மார்க்கத்தில் ஏற்பட்ட சேதம் தற்போது சீரமைக்கப்படுவதாக ரயில்வே திணைக்களத்தின் மார்க்கங்கள் மற்றும் பராமரிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
புத்தளம் ரயில் மார்க்கத்தில் சேதமடைந்த 2 பாலங்களையும் புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் தற்போது நாத்தாண்டிய வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ள ரயில் சேவையை புத்தளம் வரை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அனர்த்தங்கள் காரணமாக மலைய ரயில் மார்க்கமே அதிகளவில் சேதமடைந்துள்ளது.
அதன் புனரமைப்பு பணிகள் பல கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ரம்புக்கன - கடுகண்ணாவ, கம்பளை - நாவலப்பிட்டி, கொட்டகலை - அம்பேவல இடையிலான பகுதிகளில் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கண்டி - மாத்தளை ரயில் மார்க்கத்திலும் சேதமடைந்த பகுதிகளை புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில்வே ஊழியர்கள் மற்றும் இராணுவத்தின் முயற்சியின் பிரதிபலனாகவே வடக்கு மற்றும் கிழக்கு மார்க்கங்களில் ரயில் சேவைகள் மீளஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
