நைஜீரியாவில் பயங்கரவாதிகளின் இலக்குகள் மீது தாக்கு

நைஜீரியாவில் பயங்கரவாதிகளின் இலக்குகள் மீது தாக்குதல்

by Staff Writer 26-12-2025 | 6:18 PM

Colombo (News 1st) ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக கடுமையானதும் வலுவானதுமான தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

நைஜீரியாவின் வடமேற்குப் பகுதியில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அப்பாவி மக்களை கொலை செய்வதை இலக்காகக்கொண்டிருக்கும் பயங்கரவாதிகளுக்கு எதிராகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் தனது ட்ருத் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க இராணுவம் "எண்ணற்ற சரியான தாக்குதல்களை நடத்தியதாக தெரிவித்துள்ள ட்ரம்ப் மேலதிக விபரங்களை வௌியிடவில்லை.

நைஜீரியாவில் ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களுக்கு தயாராகுமாறு அமெரிக்க இராணுவத்திற்கு கடந்த மாதம் ஜனாதிபதி ட்ரம்ப்பினால் உத்தரவிடப்பட்டிருந்தது.

இதேவேளை, நூற்றுக்கும் மேற்பட்ட ஐஎஸ் பயங்கரவாதிகளை கைது செய்துள்ளதாக துருக்கி அறிவித்துள்ளது.