.webp)

Colombo (News 1st) திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவின் உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான 'குடு ரொஷான்' என அழைக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாளிகாவத்தை பகுதியில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நடத்திய சோதனையின் போதே அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 9mm ரக துப்பாக்கியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபரின் நேரடி கண்காணிப்பில் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
