விருதுகளை சுவீகரித்த சக்தி TV, சிரச TV, News1st

அரச தொலைக்காட்சி விருது விழாவில் விருதுகளை சுவீகரித்த சக்தி TV, சிரச TV, News1st, TV1

by Chandrasekaram Chandravadani 23-12-2025 | 9:56 PM

Colombo (News 1st) அரச தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவில் சக்தி TV, சிரச TV, நியூஸ் ஃபெஸ்ட் மற்றும் TV1 ஆகியன பல விருதுகளை சுவீகரித்தன.

அரச தொலைக்காட்சி விருது விழா 2025
சிறந்த தொலைக்காட்சி ஆண் செய்தி வாசிப்பாளர்(தமிழ்) - நியூஸ் ஃபெஸ்ட்டின் ஜெப்ரி ஜெபதர்ஷன்
சிறந்த தொலைக்காட்சி பெண் செய்தி வாசிப்பாளர்(தமிழ்) - நியூஸ் ஃபெஸ்ட்டின் அனிஸ்டா விமல்ராஜ்
சிறந்த தொலைக்காட்சி சஞ்சிகை நிகழ்ச்சி - சக்தி TV-யில் ஒளிபரப்பான 'Good Morning Sri Lanka' நிகழ்ச்சிக்காக செல்வராஜ் வினோதன் 
சிறந்த தொலைக்காட்சி பாடல் காட்சி படைப்பாக்கத்திற்கான திறமை சான்றிதழ் - சக்தி TV-யில் ஒளிபரப்பான 'Shakthi Crown' நிகழ்ச்சிக்காக எஸ்.விமலகாந்தன் மற்றும் விராஜ் ஜயமான்ன
சிறந்த தொலைக்காட்சி தொடர் நாடக தயாரிப்பு - சக்தி TV
சிறந்த தொலைக்காட்சி தொடர் நாடக ஒலிப்பதிவு திட்டமிடல் 'நகரா நொடிகள்' நாடகத்திற்காக சக்தி TV-யின் எம்.பவதரணன்
சிறந்த தொலைக்காட்சி தொடர் நாடக நடிகருக்கான விசேட ஜூரி விருது - 'நகரா நொடிகள்' நாடகத்திற்காக செமில் கிளின்சன் 
சிறந்த தொலைக்காட்சி தொடர் நாடக ஔிப்பதிவாளர் - 'நகரா நொடிகள் நாடகத்திற்காக சக்தி TV-யின் இனோஷ் கனிஷ்க
சிறந்த தொலைக்காட்சி தொடர் நாடக படத்தொகுப்பாளர் - 'நகரா நொடிகள்' நாடகத்திற்காக சக்தி TV-யின் தர்ஷினி மகேஸ்வரன்
சிறந்த தொலைக்காட்சி தொடர் நாடக திரைவசனம் - 'நகரா நொடிகள்' நாடகத்திற்காக சக்தி TV-யின் சுதர்ஷன் கனகராஜா
சிறந்த தொலைக்காட்சி தொடர் நாடக இயக்குநர் - சக்தி TV-யின் சுதர்ஷன் கனகராஜா
சிறந்த தொலைக்காட்சி தொடர் நாடக கலை இயக்குநர் - 'நகரா நொடிகள்' நாடகத்திற்காக சக்தி TV-யின் சுதர்ஷன் கனகராஜ் 
சிறந்த தொலைக்காட்சி ஆய்வு நூல் - தேசிய கல்வி நிறுவகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஶ்ரீ தயாளன் ஶ்ரீ பிருந்திரன்
சிறந்த தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்(சிங்களம்) - நியூஸ் ஃபெஸ்ட்டின் அமில முனசிங்க
சிறந்த தொலைக்காட்சி பெண் செய்தி வாசிப்பாளர்(சிங்களம்) - நியூஸ் ஃபெஸ்ட்டின் ஒமாயா கோவிலகொடகே
சிறந்த தொலைக்காட்சி பெண் நிகழ்ச்சி தொகுப்பாளர்(ஆங்கிலம் - நவேக்‌ஷா குணசேகர
சிறந்த தொலைக்காட்சி பெண் செய்தி வாசிப்பாளர்(ஆங்கிலம்) - நியூஸ் ஃபெஸ்ட்டின் நவேக்‌ஷா குணசேகர
சிறந்த தொலைக்காட்சி Multi camera நிகழ்ச்சி தயாரிப்பு - 2024ஆம் ஆண்டில் தம்மிக பொன்சேகா இயக்கிய Five Million Money Drop நிகழ்ச்சி

அரச தொலைக்காட்சி விருது விழா 2024
தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் சிறந்த நிகழ்ச்சி(சிங்களம்) - 'பெத்திகட' நிகழ்ச்சிக்காக நியூஸ் ஃபெஸ்ட்டின் அசோக டயஸ்
ஆங்கில ஆவணமாக்கல் நிகழ்ச்சிக்கான திறமை சான்றிதழ் - 'The Dance of Gaja' நிகழ்ச்சிக்காக நியூஸ் ஃபெஸ்ட்டின் அசோக டயஸ்
தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் சிறந்த ஆங்கில நிகழ்ச்சி - நியூஸ் ஃபெஸ்ட்டின் சொனாலி வனிகபதுகே
சிறந்த தொலைக்காட்சி நடிகை - திசுரி யுவனிகா
சிறந்த நடிகர் - தனுக்க டில்ஷான்

அரச தொலைக்காட்சி விருது விழா 2022
சிறந்த புலனாய்வு செய்தி அறிக்கையிடல் - நியூஸ் ஃபெஸ்ட்டின் லக்மால் கிரிந்திகல

அரச தொலைக்காட்சி விருது விழா 2021
சிறந்த புலனாய்வு செய்தி அறிக்கையிடல் - நியூஸ் ஃபெஸ்ட்டின் விந்தன பிரசாத் கருணாரத்ன
சிறந்த தொலைக்காட்சி புலனாய்வு தேடல் செய்தி அறிக்கை(தமிழ்) ஜூரி விருது சான்றிதழ் - நியூஸ் ஃபெஸ்ட்டின் ரியாஸ் ஹாரிஸ் 
சிறந்த தொலைக்காட்சி தொடர் நாடக இசையமைப்பாளர் - சக்தி TV-யில் ஔிபரப்பாகிய 7K நாடகத்திற்காக வேர்ள் பிரஜிவ்
சிறந்த தொலைக்காட்சி இசையாக்கல் நிகழ்ச்சி - TV-யில் ஒளிபரப்பான சக்தி சுப்பர் ஸ்டார் இறுதி சுற்றுக்கான நிகழ்ச்சியை வழங்கிய தினேஸ் குமார் 
சிறந்த தொலைக்காட்சி ஆவண நிகழ்ச்சி - 'பயணம் - இராவண தேசம்' நிகழ்ச்சிக்காக சக்தி TV-யின் சுதர்சன் கனகராஜா
மிகச்சிறந்த தொலைக்காட்சி தொடர் நாடக ஔிப்பதிவாளர் - ஔிபரப்பாகிய 7K நாடகத்திற்காக பெத்தும் பிரசாந்த் பெரேரா
மிகச்சிறந்த தொலைக்காட்சி தொடர் நாடக படத்தொகுப்பாளர் - 7K நாடகத்திற்காக லங்கா விதானகே
மிகச்சிறந்த தொலைக்காட்சி தொடர் நாடக துணை நடிகர் - 7K  நாடகத்திற்காக தர்சன் தவராஜ்
மிகச்சிறந்த தொலைக்காட்சி தொடர் நாடக துணை நடிகை - 7K நாடகத்திற்காக மோனிசா பாக்கியராஜா
மிகச்சிறந்த நடிகருக்கான விருது - 7K நாடகத்திற்காக சுதர்சன் ரவீந்திரன்
மிகச்சிறந்த நடிகை - 7K நாடகத்திற்காக கவிப்பிரியா மனோகரன்
மிகச்சிறந்த தொலைக்காட்சி திரைப்படம்(தமிழ்) - அதிரா தொலைக்காட்சி திரைப்படத்திற்காக இயக்குநர் சுதர்சன் கனகராஜா
சிறந்த தொலைக்காட்சி தொடர் நாடக திரைவசனம்(தமிழ்) - 7K  நாடகத்திற்காக கனகராஜா தினேஸ்குமார்
மிகச்சிறந்த தொலைக்காட்சி தொடர் நாடக இயக்குநர் - சக்தி தொலைக்காட்சியில் ஔிபரப்பாகிய 7K நாடகத்திற்காக கனகராஜா தினேஸ்குமார் 
மிகச்சிறந்த தொலைக்காட்சி நாடகம்(தமிழ்) - 7K நாடகத்தை தயாரித்தமைக்காக சக்தி TV அலைவரிசை
சிறந்த தொகுப்பிற்கான திறமை சான்றிதழ் - சக்தி தொலைக்காட்சியில் ஔிபரப்பான அமாயா நாடகத்திற்காக மனோஜ் ராஜன்
அமாயா நாடகத்தில் நடித்த ஜொனி அப்ரியனிற்கு சிறந்த நடிகருக்கான திறமை சான்றிதழ்
சிறந்த தொலைக்காட்சி அனிமேசன் தயாரிப்பிற்கான திறமை சான்றிதழ் - சக்தி தொலைக்காட்சியில் ஔிபரப்பான 'க்ரைம் ஸ்ரோரி தீம்' நிகழ்ச்சிக்காக புத்திக்க திசாநாயக்க