.webp)

Colombo (News 1st) இந்திய வௌிவிவகார அமைச்சர், கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(22) மாலை நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
இந்திய வௌிவிவகார அமைச்சர் உள்ளிட்ட தூதுக்குழுவினரை சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் ருவன் ரணசிங்க உள்ளிட்ட குழுவினர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றனர்.
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் பல இந்திய நிவாரணப் பொருட்களை வழங்கும் நோக்கிலேயே இந்திய வௌிவிவகார அமைச்சர் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்காக இந்தியாவினால் ஆரம்பிக்கப்பட்ட சாகர் பந்து திட்டத்தின் அடுத்தகட்டத்தை குறிப்பதும் இந்த விஜயத்தின் மற்றுமொரு நோக்கமாகும் என பிரதியமைச்சர் ருவன் ரணசிங்க குறிப்பிட்டார்.
