வர்த்தக நிலையத்தில் பரவிய தீ

வர்த்தக நிலையத்தில் பரவிய தீ

by Staff Writer 21-12-2025 | 7:16 PM

Colombo (News 1st) திஹாரிய நகரிலுள்ள விற்பனை நிலையமொன்றில் இன்று(21) பகல் தீ பரவல் ஏற்பட்டது.

மின்விளக்குகள் விற்பனை நிலையமொன்றின் மூன்றாம் மாடியில் தீ பரவியதாக பொலிஸார் தெரிவித்தனர். 

2 தீயணைப்பு வாகனங்களை ஈடுபடுத்தி தீயணைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கொழும்பு - கண்டி வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.