.webp)
-606214-552033.jpg)
Colombo (News 1st) அனுராதபுரம் மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான எஸ்.சீ. முத்குமாரண மற்றும் ஜனக் மஹேந்திர அதிகாரி ஆகியோர் காலமானார்கள். கெக்கிராவ தொகுதியை பிரதிநிதிதுவப்படுத்தி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடாக இரண்டு தடவைகள் பாராளுமன்றத்துக்கு தொிவு செய்யப்பட்ட ஜனக் மஹேந்திர அதிகாரி
நேற்று(17) தமது 60ஆவது வயதில் மாரடைப்பால் காலமானார்.
அனுராதபுரம் மாவட்டத்தினால் பாராளுமன்றத்திற்கு தெரிவான புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் பிரதியமைச்சர் பதவியை வகித்த எஸ். சீ. முத்துகுமாரன மாரடைப்பினால் நேற்று மரணித்தார்.
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவர் தமது 73ஆவது வயதில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
