.webp)
-606190-552058.jpg)
Colombo (News 1st) விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவுனர் ஜூலியன் அசேஞ்ச் நோபல் குழுவிற்கெதிராக முறைப்பாடு செய்துள்ளார்.
2025ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வெனிசூவேலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டமைக்கு எதிராக இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மச்சாடோவுக்கு வழங்கப்படும் ஒரு மில்லியன் டொலர் நிதி சன்மானத்தை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.
வெனிசூவேலாவுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சித் தலைவர் மரியா மச்சாடோ பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் ஜூலியன் அசேஞ்ச் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடுகளுக்கிடையே சகோதரத்துவத்தை நிலைநாட்டுவதற்கு தம்மை அர்ப்பணித்தவர்கள் மற்றும் மனிதகுலத்திற்கு நன்மை செய்தவர்களுக்கு மாத்திரமே அமைதி பரிசு வழங்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
