சப்புகஸ்கந்த OIC-க்கு எதிராக பொலிஸ் உள்ளக விசாரணை

அசோக ரன்வலவின் வீதி விபத்து தொடர்பில் சப்புகஸ்கந்த OIC-க்கு எதிராக பொலிஸ் உள்ளக விசாரணை

by Staff Writer 13-12-2025 | 8:05 PM

Colombo (News 1st) சப்புகஸ்கந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக உள்ளக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவின் வாகனம் விபத்தின் பின்னர் பொலிஸார் செயற்பட்டமை தொடர்பாக இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் சட்டம் முறையாக அமுல்படுத்தப்பட்டுள்ளதா, இல்லையா என்பதை விசாரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சப்புகஸ்கந்த - தெனிமுல்ல சந்தியில் பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல செலுத்திய ஜீப் வாகனம் நேற்று முன்தினம்(11) மோட்டார் சைக்கிளில் மோதுண்டு பின்னர் எதிரே வந்த காரில் மோதி விபத்திற்குள்ளானது.

சம்பவத்தில் காரில் பயணித்த 6 மாத குழந்தை மற்றும் 02 பெண்கள் காயமடைந்தனர்.

சம்பவம் தொடர்பாக வீதி விபத்தை தடுக்கத் தவறியமை, கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தியமை, காயம் ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நேற்று(12) கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.