பதில் பிரதம நீதியரசர் நியமனம்

உயர் நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட பதில் பிரதம நீதியரசராக நியமனம்

by Chandrasekaram Chandravadani 08-12-2025 | 6:58 PM

Colombo (News 1st) உயர் நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட பதில் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க முன்னிலையில் அவர் பதில் பிரதம நீதியரசராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன வெளிநாடு சென்றுள்ள நிலையில் ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டது.