.webp)

Colombo (News1st) அனர்த்த நிலைமையால் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த தெஹிவளை மற்றும் பின்னவல மிருகக்காட்சிச்சாலைகள் மீள திறக்கப்பட்டுள்ளன.
மரங்கள் முறிந்து வீழ்ந்தமையால் மிருகக்காட்சிச்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டதாக தேசிய மிருகக்காட்சிச்சாலை திணைக்களம் தெரிவித்தது.
இந்நிலையில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் மிருகக்காட்சிச்சாலைகளை மீள திறக்க தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் கூறியுள்ளது.
