நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம் - வளிமண்டலவியல் திணைக்களம்

by Staff Writer 05-12-2025 | 9:56 AM

Colombo (News1st) நாட்டின் சில பகுதிகளில் இன்று(05) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் இன்று(05) இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிற்பகல் 1 மணிக்கு பின்னர் நாட்டின் ஏனைய பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்று 50 மில்லிமீட்டருக்கும் அதிக மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.