மும்மார்க்கங்களுடாக சக்தி - சிரச நிவாரண யாத்திரை

தரை, நீர் மற்றும் வான் வழியாக தொடர்ந்தும் சக்தி - சிரச நிவாரண யாத்திரை

by Staff Writer 05-12-2025 | 11:26 AM

Colombo (News1st) சக்தி - சிரச நிவாரண யாத்திரைக்கு மக்கள் வழங்கிய நிவாரணப் பொருட்களை நிர்க்கதியான மக்களிடம் கையளிக்கும் நடவடிக்கை தரை, நீர் மற்றும் வான் வழியாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.

முப்படையினர், பொலிஸ், நிவாரண சேவை குழுக்கள் மற்றும் தன்னார்வமாக முன்வந்த பெருமளவானோரின் உதவியுடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

அனர்த்த நிலைமை ஆரம்பமாகி 24 மணித்தியாலங்கள் கடப்பதற்கு முன்னரே பாதிக்கப்பட்ட மக்கள் இருந்த பல்வேறு பகுதிகளுக்கும் சென்று அத்தியாவசிய பொருட்களைப் பகிர்ந்தளிக்க சக்தி - சிரச நிவாரண யாத்திரை முன்வந்தது.

இன்று பன்னல, மடூல்சீமை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சக்தி - சிரச நிவாரண யாத்திரையூடாக உலருணவுப் பொருட்களை விநியோகிக்கப்படவுள்ளது.

நேற்றைய தினமும் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்கும் சக்தி - சிரச நிவாரண யாத்திரை நிவாரணப் பொருட்களை கொண்டு சென்றிருந்தது.

இலங்கை விமானப்படை, சர்வோதய அமைப்பு, இலங்கை உயிர் பாதுகாப்பு சங்கம் என்பன சக்தி - சிரச நிவாரண யாத்திரையுடன் இம்முறை இணைந்துள்ளன.

இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவின் கண்காணிப்பில் இலங்கை இராணுவமும், சக்தி - சிரச நிவாரண யாத்திரைக்கு பங்களிப்பு நல்குகின்றது. 

கொழும்பு 02 பிரேபுரூக் பிளேஸிலுள்ள சக்தி - சிரச தலைமையகம், தெபானம கலையகம், கண்டி சிட்டி சென்டரின் முதலாம் மாடியில் தொடர்ந்தும் நீங்கள் நிவாரணப் பொருட்களை கையளிக்க முடியும்.

இதனிடையே, மற்றுமொரு நிவாரணப்பொருள் சேகரிப்பு மையம் காலி கஹந்துவத்த பகுதியிலும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சக்தி - சிரச நிவாரண யாத்திரைக்காக, பருப்பு, அரிசி, நூடுல்ஸ், பிஸ்கட், சோயா மீட், டின் மீன் மற்றும் சுகாதாரப் பொருட்களை எம்மிடம் நீங்கள் கையளிக்கலாம்.

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு பெரும் பிரயத்தனத்துடன் சேர்த்த சொத்துக்களையும் இழந்து, மண்மேடுகள் சரிந்து, வீதிகள் உடைந்து, மண்மேடுகளுக்குள் அன்பானவர்கள் புதையுண்டு அனைத்தும் தலைகீழாக மாறி நிர்க்கதியாகியுள்ள எம்மவர்களுக்காக உதவும் ஒவ்வொரு கரங்களுக்கும் எமது நன்றிகள்..