.webp)

Colombo (News1st) அனர்த்தங்களால் இடம்பெயர்ந்த மற்றும் கிராமங்களில் வசிப்போரின் சுகாதார நிலைமை தொடர்பில் ஆராய்வதற்கு நடமாடும் குழுக்களை ஈடுபடுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த குழுக்களின் ஊடாக தொற்றாநோய்களின் தாக்கத்திற்கு உள்ளாகும் மக்களுக்கு தேவையான மருந்துகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இடம்பெயர்ந்த மக்களுக்கான மருத்துவ சேவைகளை வழங்க தன்னார்வமாக முன்வந்துள்ள வைத்தியர்களின் பங்கேற்புடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
இதற்கான பொருத்தமான இடங்களை பெற்றுக்கொள்ள மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தை தொடர்புகொள்ளுமாறு சுகாதார பிரதியமைச்சர் வைத்தியர் ஹங்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
எலிக்காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கான மருந்துகள், அனைத்து பொது சுகாதார பரிசோதகர்களிடமும் காணப்படுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
