ஸ்ரீலங்கா டெலிகொம் மக்களிடம் கோரிக்கை

சிறந்த தகவல் தொடர்பை பேணுவதற்கு ஒத்துழைக்குமாறு ஸ்ரீலங்கா டெலிகொம் பொதுமக்களிடம் கோரிக்கை

by Staff Writer 04-12-2025 | 5:41 PM

Colombo (News1st) சீரற்ற வானிலையால் பல்வேறு பகுதிகளில் அறுந்து வீழ்ந்துள்ள டெலிகொம் Fiber Cable மற்றும் செப்புக் கம்பிகளை அப்புறப்படுத்தவோ அல்லது வெட்டவோ வேண்டாம் என ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

குறித்த Cable மற்றும் கம்பிகள் அறுந்து வீழ்ந்துள்ள போதிலும் அவை செயற்பாட்டில் உள்ளதாக டெலிகொம் நிறுவனம் அறிக்கை வௌியிட்டுள்ளது.

வீதிகளை சுத்தம் செய்யும்போது வீழ்ந்துள்ள கேபிள்களை அகற்றுதல் அல்லது வெட்டுதல் போன்ற சம்பவங்களால் பல நகரங்களில் தகவல் தொடர்பு தடைகள் ஏற்படும் சம்பவங்கள் தற்போது பதிவாகி வருவதாக ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான நெருக்கடியான சூழலில் தொலைத்தொடர்பு Fiber Cable-கள் மற்றும் செப்பு கம்பிகளுக்கு சேதம் ஏற்படுத்தாமல் இருப்பதன் ஊடாக சிறந்த தகவல் தொடர்பைப் பேணுவதற்கு ஒத்துழைக்குமாறு ஸ்ரீலங்கா டெலிகொம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.