இலங்கையை மீள கட்டியெழுப்ப சர்வதேச உதவிகள்

இலங்கையை மீளக் கட்டியெழுப்ப சர்வதேச உதவிகள்

by Staff Writer 04-12-2025 | 4:41 PM

Colombo (News1st) பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு சர்வதேச உதவிகள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

'டித்வா' சூறாவளிக்கு பின்னரான நாட்டின் நிலைமையை மதிப்பிடுவதற்கும் நிவாரணம், மீட்புப் பணிகள் மற்றும் புனர்நிர்மாண செயற்பாடுகளுக்கான உதவிகளை ஒருங்கிணைப்பதற்கு இராஜதந்திர தூதுக்குழு மற்றும் சர்வதேச கடன் வழங்கும் நிறுவனங்களுடன் நிதியமைச்சு நேற்று(03) கலந்துரையாடலில் ஈடுபட்டது.

இந்த சந்திப்பில் கலந்துகொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி, நீடிக்கப்பட்ட கடன் வசதியின் 6ஆவது தவணையான சுமார் 350 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எதிர்வரும் 02 வாரங்களுக்குள் இலங்கைக்கு வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

பிரதான வீதிகள், பாலங்கள், நீர்ப்பாசன கட்டமைப்புகள் மற்றும் போக்குவரத்து கட்டமைப்பு உள்ளிட்ட சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளை புனர்நிர்மாணம் செய்வதற்கு ஆதரவாக தற்போதுள்ள கடன் வசதிகளை மறுசீரமைப்பதில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.