ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து நிதியுதவி

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

by Staff Writer 04-12-2025 | 4:23 PM

Colombo (News1st) ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு 3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.

பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைய நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் வலுசக்தித் துறையை மேலும் வலுப்படுத்துவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த நிதியுதவி நாட்டில் மின்சார உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோக செயன்முறைகளை மேலும் வினைத்திறன் மிக்கதாக மாற்ற உதவுமென கூறப்பட்டுள்ளது.

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு தலா 02 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி அறிவித்துள்ளது.