.webp)

Colombo (News1st) மழையுடனான வானிலையால் பாதிக்கப்பட்ட நமது உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டி நிவாரணப் பொருட்களை தரைவழி, கடல்வழி, வான் மார்க்கத்தில் கொண்டுசெல்லும் இயலுமை உங்களின் மேலான ஒத்துழைப்பினால் சக்தி, சிரச நிவாரண யாத்திரைக்கு இன்று(01) கிட்டியது.
அரநாயக்க பகுதியில் பாதிப்புக்குள்ளாகி நிர்க்கதியான மக்களுக்கு ஹெலிகொப்டரின் ஊடாக சக்தி, சிரச நிவாரண யாத்திரை உலர் உணவுப்பொதிகள் இன்று கொண்டு செல்லப்பட்டன.
இலங்கை விமானப்படையுடன் இணைந்து எம்.ஐ.17 ரக ஹெலிக்கொப்டரின் மூலம் நிவாரணப்பொருட்கள் அரநாயக்கவிற்கு எடுத்து செல்லப்பட்டன.
கட்டுநாயக்க விமானப்படைத் தலைமையகத்திலிருந்து இந்த பயணம் ஆரம்பமானது.
