.webp)
-551490.jpg)
Colombo (News 1st) இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பில் திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த நிலையில் நீதிபதி விடுமுறையில் சென்றுள்ளமையால் இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
