பழம்பெரும் இந்திய நடிகர் தர்மேந்திரா காலமானார்..

பழம்பெரும் இந்திய நடிகர் தர்மேந்திரா காலமானார்..

by Staff Writer 24-11-2025 | 9:51 PM

Colombo (News 1st) பழம்பெரும் இந்திய நடிகர் தர்மேந்திரா உடல்நலக் குறைவால் தனது 89 ஆவது வயதில் மும்பையில் இன்று(24) காலமானார்.

அவரது இறுதிக் கிரியைகள் மும்பையில் உள்ள பவன் ஹான்ஸ் தகனசாலையில் நடைபெறும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுவாசக்கோளாறு காரணமாக கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

06 தசாப்தங்களுக்கு மேலாக இந்திய திரையுலகில் ஒரு அங்கமாகத் திகழ்ந்த அவர் 'சீதா அவுர் கீதா', 'சோலே', 'தர்மவீர', 'சுப்கே சுப்கே', 2023ஆம் ஆண்டில் வௌியான ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி உள்ளிட்ட பல திரைப்படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.

நடிகர் தர்மேந்திராவின் மறைவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஆகியோரும் தமது இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.