சபேசனுக்கு நியூஸ் ஃபெஸ்ட்டின் வாழ்த்துகள்..

இந்தியாவின் 'சரிகமப' இசை நிகழ்ச்சியின் 1st Runner Up சபேசனுக்கு நியூஸ் ஃபெஸ்ட்டின் வாழ்த்துகள்..

by Staff Writer 24-11-2025 | 10:49 PM

Colombo (News 1st)  சக்தி சுப்பர் ஸ்டார் சீசன் 5-இன் இரண்டாவது வெற்றியாளரான சுகிர்தராஜா சபேசன் தமிழகத்தின் பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஔிபரப்பாகும் 'சரிகமப' இசை நிகழ்ச்சியில் பங்குபற்றி இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

சரிகமப சீனியர்ஸ் சீசன் 5 இன் மாபெரும் இறுதிச் சுற்று நேற்று(23) நடைபெற்றது.

இதில் அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் விநாயகபுரத்தை சேர்ந்த சுகிர்தராஜா சபேசன் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார்.

இசையில் ஆர்வமுள்ள இவர் 2013ஆம் ஆண்டு சக்தி சுப்பர் ஸ்டார் சீசன் 5 இன் இரண்டாவது வெற்றியாளர் என்பதும் விசேட அம்சமாகும்.

பிரபல இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவாவினால் சபேசனுக்கு வெற்றிக் கேடயம் வழங்கப்பட்டது.

சரிகமப சீனியர்ஸ் சீசன் 5 இன் வெற்றியாளராக சுசந்திகா வெற்றி வாகை சூடினார்.