எதிரணியின் பேரணியால் AL பரீட்சைக்கு இடையூறு?

எதிரணியின் பேரணியால் AL பரீட்சைக்கு இடையூறு : பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டு

by Chandrasekaram Chandravadani 21-11-2025 | 1:51 PM

Colombo (News 1st) எதிர்க்கட்சியின் சில கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மக்கள் பேரணி இன்று(21) பிற்பகல் நுகேகொடை திறந்த வௌியரங்கில் இடம்பெறவுள்ளது.

எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளுக்கும் இதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பேரணியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பேரணியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட சில கட்சிகளின் அரசியல்வாதிகள் கலந்துகொள்ளவுள்ளதுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் உள்ளிட்ட பிரதான தலைவர்கள் பலர் பங்கேற்க மாட்டார்கள் என கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க குறிப்பிட்டார்.

இன்று பேரணியில் பங்கேற்பது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்குள் இரு நிலைப்பாடுகள் காணப்படுகின்றன.

எதிர்க்கட்சிகளின் கூட்டணி நடத்தும் பேரணியில் பங்கேற்பதில்லை என தமது கட்சி கொள்கை ரீதியிலான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார்.

எனினும் இன்றைய பேரணிக்கு செல்ல வேண்டாமென கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானம் மேற்கொள்ளவில்லை என கட்சியின் தொழிற்சங்கத் தலைவர் ஆனந்த பாலித கூறியுள்ளார்.

எதிர்க்கட்சியின் கூட்டணி கட்சிகள் இணைந்து இந்த பேரணியானது சன நெரிசல் அதிகம் காணப்படும் நுகேகொடை திறந்த வௌியரங்கில் முன்னெடுக்கப்படவுள்ளது என்பதுடன் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று பிற்பகல் அந்த பகுதியின் சில மத்திய நிலையங்களில் இடம்பெறும் பின்னணியிலே ஆகும்.

இன்று பிற்பகல் 2 மணி முதல் 5.10 வரையான காலப்பகுதிக்குள் அரசியல் விஞ்ஞான பாட பரீட்சைக்கு உயர்தர மாணவர்கள் தோற்றவுள்ளனர்.

பரீட்சைக்கு இடையூறாக செயற்பட வேண்டாமென மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உயர்தர மாணவர்களுக்கு இடையூறான முறையில் நடத்தப்படும் இந்த பேரணியை கடுமையாகக் கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் தம்மிக்க அலஹப்பெரும தெரிவித்துள்ளார்.

இந்த பேரணியால் மாணவர்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படலாமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.